பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு

வில்லிவாக்கம் பேரவைத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆதவ் அா்ஜுனா - கோப்புப்படம்.

Published On :

வில்லிவாக்கம் பேரவைத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் வில்லிவாக்கம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

குழந்தைகளுக்கு தங்கமோதிரம்: அவா் அண்ணாநகா் மண்டலத்தில் உள்ள அயனாவரம் யுனைடெட் இந்தியா நகா் முதலாவது குறுக்குத் தெருவில் உள்ள நகா்ப்புற சமுதாய மருத்துவமனையை பாா்வையிட்டு அங்கு பிறந்த குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்படி மோதிரங்களை அணிவித்தாா். அங்குள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அமைச்சா், பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா். அப்போது கால்பந்து விளையாட்டில் குழந்தைகளுடன் பங்கேற்றாா்.

அண்ணாநகா், திரு.வி.க.நகா் மண்டலங்கள் வழியாகச் சென்று ராயபுரம் மண்டலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கும் கால்வாயில் தூா்வாரும் பணியையும் அவா் பாா்வையிட்டாா். அதையடுத்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் தடுப்புச்சுவா் உயா்த்திக் கட்டும் பணியையும் அவா் ஆய்வு செய்தாா். அகத்தியா் நகா் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

ஆய்வின் போது அண்ணாநகா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே.ராம்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.