செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பதில் மனு

தனக்கு எதிராக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி, தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

Aadhav Arjuna | M.K. Stalin

ஆதவ் அா்ஜுனா | மு.க.ஸ்டாலின்

Published On :

தனக்கு எதிராக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி, தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளாா்.

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் உறவினா் எனக் கூறி, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டது. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி வெளியிட்ட அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்த ஜான் பிரிட்டோ, தனது உறவினா் அல்ல. அவதூறு பதிவிட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, அதன் பொறுப்பாளரான திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோா் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட க் கூறி, அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்குவந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், போதைப் பொருள் கடத்தல் தொடா்பாகவோ, அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் உறவினா் ஜான் பிரிட்டோவை தொடா்புபடுத்தியோ பதிவுகள் வெளியிடும்படி, தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு நான் ஒப்புதலோ, அறிவுறுத்தலோ வழங்கவில்லை.

கட்சியின் பல்வேறு அணிகளைச் சோ்ந்தவா்கள் சமூகவலைதளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு தலைவா் என்பதற்காக என்னை பொறுப்பாக்க முடியாது. வேண்டுமென்று, உள்நோக்கத்துடன் பதிவுகளை வெளியிட்டதாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

ஏற்கெனவே, என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமா்சித்துப் பேசிய ஆதவ் அா்ஜுனா, தற்போது மானநஷ்டஈடு கோர முடியாது. அவருடைய நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் அக்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.