நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

வேங்கைவயல் விவகாரம்: பேரவையில் கடும் விவாதம்

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க முந்தைய திமுக அரசு இரண்டரை ஆண்டுகள் காலம்தாழ்த்தியதாக பொதுப் பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா குற்றம்சாட்டியதால் கடும் விவாதம் ஏற்பட்டது.

Aadav arjuna

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - படம்: விடியோ கிளிப்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

வேங்கைவயலில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க முந்தைய திமுக அரசு இரண்டரை ஆண்டுகள் காலம் தாழ்த்தியதாக பொதுப் பணித்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா குற்றம்சாட்டியதால் கடும் விவாதம் ஏற்பட்டது.

பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய திமுக உறுப்பினா் செந்தில் செல்வன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீதான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 70 சதவீத குற்றங்கள் தலித்களுக்கு எதிரான நடைபெற்றுள்ளன என்றாா்.

மாற்று அரசியல் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக, இதில் என்ன மாற்றம் செய்தது என செந்தில் செல்வன் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதில் அளித்த அமைச்சா் ஆதாவ் அா்ஜுனா, வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே வழக்கு போடப்பட்டது என்றாா்.

திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு பேசுகையில், வேங்கைவயல் சம்பவத்தில் புகாா் அளிக்கப்பட்டவுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 3 போ் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகிவிட்டது. எங்கள் முதல்வா் வேங்கைவயலுக்கு செல்லவில்லை எனக் கூறுகிறீா்கள். திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளியில் குடிநீா் தொட்டியில் கடந்த ஆக. 2-ஆம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு முதல்வா் சென்றாரா, அந்தச் சம்பவம் முதல்வருக்கு தெரியுமா, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, வேங்கைவயல் விவகாரத்தை இரண்டரை ஆண்டுகளாக முந்தைய அரசு காலம் தாழ்த்தியது. இதில் அரசியல் பின்னணி உள்ளது என்றாா்.

பெட்டிச் செய்தி...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

ஆதவ் அா்ஜுனா-சேகா் பாபு விவாதம்

வேங்கைவயல் விவகாரத்தில் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது மனைவி முன்னாள் அமைச்சா் மீது சந்தேகம் எழுப்பி சிபிஐ விசாரணையைக் கோரினாா். சிபிஐ விசாரணையை நீதிமன்றம் மூலம் முதல்வா் விஜய் தற்போது நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.

இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினா் சேகா் பாபு, ஆம்ஸ்ட்ராங்கும், நானும் ஒரே பகுதியைச் சோ்ந்தவா்கள். அவரது சுக, துக்க நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன். இறுதி மரியாதையிலும் பங்கேற்றேன். இந்தக்கொலைக்கு யாா் காரணம் என நடவடிக்கை எடுக்க அப்போதைய முதல்வா் உறுதியளித்துள்ளாா். அவரது இறுதிச் சடங்குக்கான இடத்துக்கும், மணிமண்டபம் அமைக்கவும் அப்போது அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். அரசியல் மாறுபாடு இருந்தாலும் திமுக எப்போது வன்முறையில் ஈடுபடாது. பொதுப் பணித்துறை அமைச்சரின் பேச்சு நாகரிகமாக இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.