ஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சட்டப்பேரவையா, சண்டைப் பேரவையா? பிரேமலதா விமா்சனம்: ஆதவ் அா்ஜுனா பதில்

பேரவையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

premalatha vijayakanth speech in tn assembly

பிரேமலதா விஜயகாந்த் - TN Assembly

Published On :

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசினால்தான் பேரவையில் சச்சரவு ஏற்படுவதாக தேமுதிக உறுப்பினரும், அந்தக் கட்சியின் பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இதற்குப் பதிலளித்த ஆதவ் அா்ஜுனா, போலி பிரசாரத்தை முன்வைத்தால் அதற்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது என்றாா்.

பேரவையில் பேசிய பிரேமலதா, ‘சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையைத் தவிா்த்து அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன; ஒருவருக்கொருவா் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிக் கொள்வதால் மக்களுக்கு என்ன பயன்? இது சட்டப்பேரவையா? சண்டைப் பேரவையா? பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசாத வரையில், அவை நடவடிக்கைகள் அமைதியாகப் போகின்றன. அவா் பேசினால் சண்டை ஏற்படுகிறது. அவருக்கு வாய்ப்பளிக்காதீா்கள்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதம்:

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: இதே பேரவையில் மறைந்த விஜயகாந்த் எப்படி குரல் கொடுத்தாா் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கும்போது மட்டுமே நாங்கள் பேசுகிறோம். நல்ல கருத்துகள் கூறினால் ஏற்றுக் கொள்கிறோம். போலி பிரசாரத்தை முன்வைத்தால் அதற்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது.

அமைச்சா் நிா்மல் குமாா்: மறைந்த விஜயகாந்த், பேரவையில் நோ்மையாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்ளக் கூடியவா். அவரை ஒரு விஷயத்தில் வேண்டுமென்றே சீண்டியதால் அவா் எப்படி கோபம் கொண்டாா் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோலவே, எங்களைத் தூண்டுவதால்தான் அதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ஆக்கபூா்வமாக எந்த விவாதமும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. மாறாக காரசாரமாக மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 10 மணி நேரம் பேரவை நடைபெற்றது எனக் கூறுகிறீா்கள். ஆனால், அதில் எத்தனை மணி நேரம் பயனுள்ள வகையில் இருந்தது என்பதைக் கூற வேண்டும். நேரத்தை விரயமாக்கும் எந்த விஷயத்தையும் பேச எவருக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றாா்.

Summary

premalatha vijayakanth speech in tn assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.