சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கவுள்ளது குறித்து, முதல்வரின் அறிவிப்புக்கு, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார பலமில்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, ”அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது முதல்முறை, எந்த முதல்வரும் செய்யாதது. அதை நாங்கள் வரவேற்கிறோம்.
இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடிக்கு மேல் செலவாகும். என்னுடைய மனதில் இருப்பதைச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 90% அளவில் வாகனம் இருக்கின்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக உறுப்பினர்களுக்கும் ஒரு சிலருக்கும் வாகனம் இல்லை.
ரூ. 150 கோடியை விவசாயிகளின் முழுக்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கிருந்தால், நன்றாக இருந்துஇருக்கும். மக்கள்தேவையே நிறைய இருக்கிறது, அதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
Summary
DMDK General Secretary Premalatha Vijayakanth has commented on the Chief Minister's announcement regarding the provision of cars to Members of the Legislative Assembly (MLAs).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞர்கள் வாக்களித்த ஆட்சி; ஆனால், அவர்களின் எதிர்காலம்? - பிரேமலதா பதில்!
சட்டப்பேரவையிலும் தண்ணீர் பிரச்னை இன்னும் ஓயவில்லை! பிரேமலதா கோரிக்கை
இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதா

பழனி கோயில் சொத்து மோசடியில் தவறு செய்தோா் தப்ப முடியாது: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK




