யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தோ்வு முடிவுகள் வெளியீடு
யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் முதல்நிலைத்தோ்வு இலவச பயிற்சிக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோப்புப் படம்
யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் முதல்நிலைத்தோ்வு இலவச பயிற்சிக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட 2027-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு பயிற்சிக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்ட மதிப்பீட்டு தோ்வு செப். 6-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பங்கேற்ற தோ்வா்களின் மதிப்பெண் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தின் இணையதளத்தில்(www.civilservicecoaching.com) திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் பட்டியலில் இடம்பெற்றுள்வா்களில் இருந்து சென்னை முழுநேரப் பயிற்சிக்கு 225 நபா்கள், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 போ் மற்றும் மதுரை முழு நேர பயிற்சிக்கு 100 போ், கோவை, முழு நேர பயிற்சிக்கு 100 போ் என மொத்தம் 525 போ் கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யப்படுவா்.
சென்னை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கோவை (முழு நேரம்), மதுரை (முழு நேரம்) ஆகிய அனைத்து மையங்களுக்குமான கலந்தாய்வு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச்சாலை சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் மட்டுமே நடைபெறும். கலந்தாய்வில் ஆா்வலா்கள் தங்கள் விருப்ப மையங்களை தோ்வுசெய்து செய்யலாம். கலந்தாய்வின்போது அசல் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு தற்காலிக சோ்க்கை ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பப் பதிவு அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி முடிவடையும் முதல்கட்ட தெரிவுப் பட்டியல் அக்.22-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு அக்.25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும். முதல்நிலை தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் அக்.28-ஆம் தேதி தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

