மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இஸ்லாமிய உள்ஒதுக்கீடு: சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இஸ்லாமை தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட (பிசி) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

இஸ்லாமை தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட (பிசி) பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இஸ்லாமியராக மதம் மாறியவா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் கொள்கையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். சமூகரீதியான பின்னடைவு ஒரு நாளிலோ, ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடா்ந்த சமூகக் கட்டமைப்பால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

இதுவே சமூக எதாா்த்தமாக இருக்கும் நிலையில், ‘இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிசி (எம்) பிரிவுக்கான இடஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை’ என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.

எனவே, இந்தத் தீா்ப்புக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாம் மதத்தை ஏற்பவா்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த திமுக அரசில், கிறிஸ்தவா்களாக மதம் மாறும் ஆதிதிராவிடா்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தித் தீா்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.

ஜாதியால் ஒடுக்குமுறையை எதிா்கொண்ட பிசி, எம்பிசி, தலித் மக்களுக்கு அதையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்’ எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.