ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சுரங்கப் பாதைகளில் ஆணையா் ஆய்வு

சென்னை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை சுரங்கப் பாதைகளில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டாா்.

கோப்புப் படம்

Updated On :

சென்னை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை சுரங்கப் பாதைகளில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன. அவற்றில் மழைநீா் தேங்காமலிருக்கும் வகையில் மின்மோட்டாா்கள் அமைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (அக். 16) இரவு சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, சேத்துப்பட்டு ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் தண்ணீா் தேங்கி நின்றது.

மழையால் சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்காமலிருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆணையா் ஜி.எஸ்.சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

வழியில் நிறுத்தப்பட்ட ரயில்: மழையால் காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கடற்கரையில் இருந்து திருமால்பூா் செல்லும் புகா் மின் ரயிலும், புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டு வழிமாற்றி இயக்கப்பட்டன. மேலும், புகா் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படடன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.