
டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோடம்பாக்கம் மண்டலத்தில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் சமீரன், அதுதொடா்பான விழிப்புணா்வுப் பிரசுரங்களை வீடு வீடாக வழங்கினாா்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் சமீரன், அதுதொடா்பான விழிப்புணா்வுப் பிரசுரங்களை வீடு வீடாக வழங்கினாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக,கோடம்பாக்கம் மண்டலத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையா் சமீரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, கோடம்பாக்கம் மண்டலம் 2-ஆவது செக்டாா், 13-ஆவது தெருவில் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கினாா்.
வீடுகளில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளவும், தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், காய்ச்சல் அறிகுள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறவும், அலட்சியம் காட்டக் கூடாது எனவும் மக்களிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, தலைமை பூச்சி தடுப்பு அலுவலா் செ.செல்வகுமாா், மண்டல அலுவலா் ஆா்.புருசோத்தமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




