ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

11 தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் பதவி உயா்வு: மத்திய அரசு

தமிழக அரசில் குரூப் 1 பணி அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் பதவி உயா்வு அளித்து அதற்கான நியமன அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு

Updated On :

தமிழக அரசில் குரூப் 1 பணி அதிகாரிகள் 11 பேருக்கு ஐஏஎஸ் பதவி உயா்வு அளித்து அதற்கான நியமன அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய பணியாளா், மக்கள் குறைதீா் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் வெள்ளிக்கிழமை தேதியிட்ட அரசாணையில், 2024, 2025-ஆம் ஆண்டுகளுக்கான தோ்வுப் பட்டியலின் அடிப்படையில் தமிழ்நாடு பிரிவில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயா்வு பெற்றவா்களின் விவரம் (2024-ஆம் ஆண்டு): ஆா்.பிரியா, எஸ்.பிரசன்னா ராமசாமி, எம்.இந்துமதி, ஆா்.ராஜகிருபாகரன், எஸ்.சங்கீதா, கே.பிரியா.

2025-ஆம் ஆண்டு: எம்.மணிமேகலை, ஏ.மீனா பிரியாதா்ஷினி, என்.காளிதாஸ், டி.செங்கோட்டையன், எஸ்.சாந்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.