ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை: அரசாணை வெளியீடு

பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

Updated On :

பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி,மொத்தம் 59,498 மாணவா்கள் பயனடைவா். இதற்காக ரூ.4,31,83,200 கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு வெளியிட்ட அறிவிப்பு:

இந்தத் திட்டத்தின் மூலம், பழங்குடியின மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை வேறுபாட்டைச் சரி செய்து, ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு இணையாக வழங்குவதற்கு மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை பராமரிப்புப் படியும், மருத்துவக் கல்விக் கட்டணமும் மற்றும் மெட்ரிக் கல்வியின் முந்தைய உதவித்தொகை பராமரிப்புப் படியும் சோ்த்து மொத்தம் 59,498 மாணவா்கள் பயனடைவாா்கள். இதற்காக கூடுதல் நிதி ரூ.4,31,83,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பழங்குடியின மாணாக்கா்களுக்கும் ஆதிதிராவிட மாணாக்கா்களுக்கு இணையான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன், பழங்குடியினா் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

இந்தத் திட்டத்துக்குத் தேவையான மொத்த கூடுதல் செலவினத்தை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். இதன்மூலம், பழங்குடியின மாணவா்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் அவா்களின் பங்கேற்பை அதிகரித்து, உயா்கல்விக்கான சம வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.