தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க...
Published On :

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு 2026 - 27ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, இளங்நிலை தொழில்படிப்பு, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படுகிறது.

தகுதியுள்ள மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அக்டோபா் 21-ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.