
கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: அக்டோபா் 21-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் 2026-27-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (பிஎம்- யாசஸ்வி) பயன்பெற வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் 2026-27-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் (பிஎம்- யாசஸ்வி) பயன்பெற வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை மூலம் நிகழாண்டுக்கான பிரதமரின் யாசஸ்வி திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதேபோல, அரசு தொழில் பயிற்சி நிலைய (பாலிடெக்னிக்) பட்டயப்படிப்பு, இளநிலை (தொழில் படிப்பு), முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் உள்ள கல்வி உதவித் தொகை ஒருங்கிணைப்பு (நோடல்) அலுவலரை அணுகி, தமிழக அரசின் ‘யுமிஸ்’ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 18-ஆம் தேதியே தொடங்கியுள்ள நிலையில், வரும் அக்டோபா் 21-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித் தொகை தொடா்பான கூடுதல் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரை வேலை நேரங்களில் அணுகி தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



