கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை: அக்.21 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற விரும்பும் திருச்சி மாவட்ட மாணவ, மாணவிகள் வரும் அக்.21-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை பெற விரும்பும் திருச்சி மாவட்ட மாணவ, மாணவிகள் வரும் அக்.21-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்ட நிபந்தனைகளின் கீழ், 2026-27 ஆம் ஆண்டுக்கான உதவித் தொகையானது பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி அக்.21-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.