மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உயா் கல்விக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா் (பிசி), மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் (எம்பிசி/டிஎன்சி) மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா் (பிசி), மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் (எம்பிசி/டிஎன்சி) மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா்களுக்கு கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம், சென்னை-5, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம், மாணவரின் உண்மைச் சான்றிதழுடன் பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரும் அக்.31-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவ.30-ஆம் தேதிக்குள்ளும் அனுப்பப்பட வேண்டும். மேலும், பருவ கட்டண ரசீதுகளை 2027 ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் பிற கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவா்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவா்கள். எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையைப் பெற்று பயனடையுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.