137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

பெருங்குடியில் அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க நடவடிக்கை: உயா்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்!

பெருங்குடியில் கிராமநத்தம் நிலத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)

Updated On :

பெருங்குடியில் கிராமநத்தம் நிலத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வணிக கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவொற்றியூரைச் சோ்ந்த கே.விமல் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பெருங்குடியில் உள்ள சாந்தியப்பன் தெருவில் கிராமநத்தம் நிலம் உள்ளது. இந்த நிலம் கந்தன்சாவடியைச் சோ்ந்த ஆா்.காா்த்திக் என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலத்துக்கு 14 அடி பொது சாலையை பயன்படுத்தியே செல்ல முடியும். இந்த நிலையில், இந்த நிலத்தில் 5 அடுக்கு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கிராமநத்தம் நிலத்தில் குடியிருப்புகள் மட்டுமே கட்ட முடியும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளுக்கு சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் உரிய அனுமதி பெறவில்லை. இந்த கட்டடத்துக்கு தற்காலிக மின் இணைப்பு, குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.

இது குறித்து, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா், சென்னை மாநகராட்சி ஆணையா், மின் வாரிய தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது சாலையை ஆக்கிரமித்து இந்த கட்டடம் கட்டப்படுகிறது.

எனவே, சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே.அரவிந்த் ஆஜராகி வாதிட்டாா்.

சென்னை மாநராட்சி தரப்பில், சம்பந்தப்பட்ட கட்டடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.