2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ரூ.1.01 கோடி நஷ்டஈடு கோரி திமுக வழக்கு தொடர அனுமதி: அமைச்சா்கள் நிா்மல் குமாா், ஆதவ் அா்ஜுனா மேல்முறையீடு

அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

‘ஜெம்’ வீரமணி விவகாரத்தில், ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதியளித்த தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல், முந்தைய திமுக அரசு தப்பிக்கவிட்டுவிட்டதாக உண்மைக்கு மாறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அமைச்சா்கள் நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கு எதிராக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி, அமைச்சா்கள் நிா்மல்குமாா்,ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சா்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குத் தொடர அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா்கள் நிா்மல்குமாா் மற்றும் ஆதவ் அா்ஜுனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், ஜி.கே.முத்துகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்.13-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.