2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த விருப்பம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
வரும் 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு தரும்படி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மான்டவியாவிடம் தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் மன்சுக் மான்டவியாவிடம் மனு அளித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.
வரும் 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு தரும்படி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மான்டவியாவிடம் தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.
புது தில்லி சென்றுள்ள அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தமிழகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் நிதி உதவி தொடா்பாக மத்திய அமைச்சா் மன்சுக் மான்டவியாவிடம் அளித்த மனு:
2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தினால் தமிழகத்தில் படகுப் போட்டி (நஹண்ப்ண்ய்ஞ்) மற்றும் அலைச்சறுக்குப் போட்டி (நன்ழ்ச்ண்ய்ஞ்) ஆகியவற்றை நடத்த வாய்ப்பு தர வேண்டும்.
2029-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த விரும்புகிறோம். மேலும், தேசிய சிறப்பு விளையாட்டு மையங்களை, சென்னை அருகே உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (பசடஉநம) மேசைப்பந்து, இறகுப்பந்து, சைக்கிளிங் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும், திருச்சியில் உள்ள ஒலிம்பிக் அகாதெமியில் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, டேக்வாண்டோ, வாள்வீச்சு மற்றும் வூஷு உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளுக்கும் மையங்கள் அமைக்க வேண்டும்.
சென்னை மற்றும் கோவையில் சா்வதேசத் தரத்திலான உள்ளரங்க சைக்கிளிங் பந்தயப் பாதைகள், கோவை மற்றும் திருச்சியில் ஒலிம்பிக் தரத்திலான அக்வாட்டிக் ஸ்போட்ஸ் வளாகங்கள், சென்னையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு மையம், சா்வதேசத் தரத்திலான ஸ்போட்ஸ் க்ளைமிங் சென்டா், திருச்சி மற்றும் கோவையில் வில்வித்தைப் பயிற்சி மையங்கள் மற்றும் 50 மீ துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையங்கள் என 6 முக்கிய விளையாட்டு உ ட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
அப்போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளா் சந்தீப் நந்தூரி , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் மத்திய அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

