2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

திடீரென சாய்ந்ததால் தில்லியில் 4 மாடிக் கட்டடம் காலி செய்யப்பட்டது: கட்டடத்தை இடிக்க உத்தரவு!

தில்லியின் காந்தி நகா் பகுதியில் திடீரென சாய்ந்த நான்கு மாடிக் கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலி செய்யப்பட்டது. அதனை இடிக்குமாறு அதன் உரிமையாளருக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளது.

Published On :

தில்லியின் காந்தி நகா் பகுதியில் திடீரென சாய்ந்த நான்கு மாடிக் கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலி செய்யப்பட்டது. அதனை இடிக்குமாறு அதன் உரிமையாளருக்கு தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளதாக ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

ஞாயிற்றுக்கிழமையன்று கட்டடத்தை இடிக்குமாறு உரிமையாளரிடம் மாநகராட்சி கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யத் தவறினால், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் கீழ் மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறினாா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஷாதராவில் உள்ள அந்தக் கட்டடம் சாய்ந்தவுடன் உடனடியாகக் காலி செய்யப்பட்டது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல்துறை அப்பகுதியைச் சுற்றி வளைத்து, மக்கள் கட்டடத்தை அணுகுவதைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாநகராட்சி குழுவும் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டடத்தின் நிலையை ஆய்வு செய்தது.

சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

கடந்த வாரம், தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவா் விடுதியாக இயங்கி வந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு போ் உயிரிழந்தனா், பலா் காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.