2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

3 நாள்களுக்கு தில்லியில் லேசான மழைக்கு வாய்ப்பு

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Published On :

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது பருவகால சராசரியை விட 1.3 புள்ளிகள் அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாள்களுக்கு லேசான மழையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், திங்கள்கிழமை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 1.1 புள்ளிகள் அதிகமாகும்.

சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான நேரத்தில் நகரில் 3.4 மிமீ மழை பெய்தது. மாலை 5.30 மணியளவில் ஈரப்பதம் 65 சதவீதமாக பதிவாகி இருந்தது. சமீா் செயலியின்படி மாலை 6 மணி அளவில் நகரில் காற்றின் தரம் 86 என்ற அளவில் ’திருப்திகரமான’ பிரிவில் பதிவாகி இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.