2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

தில்லியில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ சராசரியை விட 1.7 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PTI

Published On :

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ சராசரியை விட 1.7 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 0.3 டிகிரி அதிகமாகும். வானிலை ஆய்வு மையம், திங்கள்கிழமை பொதுவாக மேகமூட்டமான வானமும் மிதமான மழையும் இருக்கும் என கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே சுமாா் 36 மற்றும் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு சாா்ந்த ஈரப்பதம் 63 சதவீதமாக பதிவாகியுள்ளது.

காலை 9 மணிக்கு காற்றின் தரம் ‘திருப்திகரமான’ நிலைப்பாட்டில் இருந்தது. சமீா் செயலியின் படி, காற்றுத் தரக் குறியீடு 83-ஆக பதிவாகியுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு மதிப்பீட்டில், 0 முதல் 50 வரை ‘நன்று’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரம்’, 101 முதல் 200 வரை ‘மிதமான’, 201 முதல் 300 வரை ‘மோசமான’, 301 முதல் 400 வரை ‘மிக மோசமான’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையான’ என வகைப்படுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.