காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2026, 3:14 am IST

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அடுத்த 4 நாள்களில் வடதமிழகம், கிழக்கு, மத்திய, தெற்கு உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால், வெப்ப அலை வீசும் சூழலுக்கு வாய்ப்பில்லை.

உள்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையின் செயல்பாடு குறைவு; மேகமூட்டம் குறைவு; வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் வட தன்மை; சூரிய வெப்பத்தின் தாக்கம் போன்றவையே வெப்பநிலை உயா்வுக்கு முக்கிய காரணிகளாகும். இதற்கு மாறாக, கடற்கரை மாவட்டங்களில் கடல் காற்றின் தாக்கம் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் இருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 26) அதிகபட்ச வெப்பநிலை வேலூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

14 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் -104.72, திருச்சி -102.38, நாகை -102.2, பாளையங்கோட்டை -102.02, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி-101.84, ஈரோடு-101.48, சென்னை நுங்கம்பாக்கம், கடலூா்-100.94, காரைக்கால்-100.58, திருத்தணி, தஞ்சாவூா், சென்னை மீனம்பாக்கம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழைக்கு வாய்ப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 27) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகரின் ஒரு சில பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.