
கேரளத்தில் இயல்பை விட 23% குறைந்த பருவமழை: ஐஎம்டி தகவல்!
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பற்றி ஐஎம்டி கணிப்பு பற்றி..

பருவமழை - file photo
கேரள மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை இயல்பை விடக் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 24 வரையிலான காலகட்டத்தில் கேரளத்தில் இயல்பான அளவான 1,671.4 மி. மீ-க்குப் பதிலாக 1,278.7 மிமீ மழையைப் பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 23 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளின்படி,
கேரளத்தின் கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதேவேளையில் மற்ற மாவட்டங்கள் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது; அங்கு இயல்பான அளவான 2,114.7 மி.மீ-க்கு பதிலாக 1,039.7 மி.மீ மழையே பெய்துள்ளது.
அடுத்தபடியாக இடுக்கி மாவட்டத்தில் 45 சதவீத பற்றாக்குறை பதிவாகியுள்ளது; அங்கு இயல்பான அளவான 2,092.5 மி.மீ-க்கு பதிலாக 1,147.4 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் 30 சதவீத பற்றாக்குறையும், திருச்சூர், லட்சத்தீவில் தலா 27 சதவீதமும், பாலக்காட்டில் 26 சதவீதமும் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
ஆலப்புழாவில் 25 சதவீத பற்றாக்குறை பதிவாகியுள்ளது; அங்கு இயல்பான அளவான 1,306.1 மி.மீ-க்கு பதிலாக 983.5 மி.மீ மழைப் பதிவானது. அதேபோன்று, எர்ணாகுளத்தில் 22 சதவீதமும், மலப்புரத்தில் 21 சதவீதமும் மழைப்பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கண்ணூரில் 8 சதவீத பற்றாக்குறை பதிவாகியுள்ளது.
கோட்டயத்தில் 7 சதவீதமும், கோழிக்கோட்டில் இயல்பை விட 13 சதவீதம் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பத்தனம்திட்டாவில் இயல்பான 1,250.2 மி.மீ மழைக்கு எதிராக 1,220 மி.மீ மழையும் பதிவானது. திருவனந்தபுரத்தில் இயல்பான 632.5 மி.மீ-க்குப் பதில் 629.6 மி.மீ மழையும் பதிவாகின; இதில் இயல்பு நிலையிலிருந்து மாற்றம் ஏதுமில்லை.
Keralam has received 23 per cent less rainfall than normal during the current monsoon season so far, with the state recording 1,278.7 mm of rain against the normal 1,671.4 mm between June 1 and August 24, IMD said here on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




