உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மேற்கு தில்லியில் மர ஆலையில் தீ விபத்து

தில்லியில் ராஜ்தானி மெட்ரோ நிலையம் அருகில் உள்ள மரம் மற்றும் பிளைவுட் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

Over 25 cars gutted in fire at garage in Bengaluru

தீ விபத்து.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

தில்லியில் ராஜ்தானி மெட்ரோ நிலையம் அருகில் உள்ள மரம் மற்றும் பிளைவுட் தொழிற்சாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து, தில்லி தீயணைப்புத் துறையினா் 25 தீயணைப்பு வாகனங்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக, அஸ்ஸாம் மரச்சாமான் மாா்க்கெட்டில் உள்ள மரக் கிடங்கில் அதிகாலை சுமாா் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, முதல் கட்டமாக ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதைத் தொடா்ந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதிகாலை 3:24 மணியளவில் இது ஒரு பெரிய தீ விபத்தாக அறிவிக்கப்பட்டது. காலை 6:30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சுமாா் 2,000 சதுர கெஜம் பரப்பளவில் அமைந்திருந்த, கீழ்த்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களைக் கொண்ட கட்டடத்தின் அடித்தளத்தில் இருந்த மரக் கிடங்கில்தான் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.