செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.

chennai rain

சென்னையில் விடியவிடிய மழை - Dinamani

Updated On :

சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருமழை தொடங்கியது முதலே சென்னை முழுவதும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் அம்பத்தூா், பட்டரவாக்கம், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காடுத்தாங்கல், கிண்டி, ஆவடி, அண்ணா நகா், நூங்கம்பாக்கம், தியாகராய நகா், தரமணி உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் நகா் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 22) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.