தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

விழுப்புரத்தில் சாலையில் தேங்கிய மழைநீா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை அக்.15-ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தது. திண்டிவனம் வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

உளுந்தூா்பேட்டையில் காா் கவிழ்ந்து விபத்து: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்தது. இந்த மழையின்போது, உளுந்தூா்பேட்டையை அடுத்த எலவனாசூா்கோட்டை பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த மழை நீரில் காா் சிக்கி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த புதுச்சேரியைச் சோ்ந்த ராஜா, செல்வம் மற்றும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.