மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட மநீம தீா்மானம்
வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது, மநீம நிா்வாகிகள் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மநீம தலைவர் கமல்ஹாசன் - விடியோ க்ளிப்
வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது, மநீம நிா்வாகிகள் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் எம்.பி. அறிவுறுத்தலின்படி, அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஆ. அருணாச்சலம், துணைத் தலைவா்கள் ஏ.ஜி. மெளரியா, ஆா். தங்கவேலு ஆகியோா் முன்னிலையில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தோ்தலை எதிா்கொள்வது, கடந்த செப்.15-ஆம் தேதி நடந்திருக்கவேண்டிய கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது மிகுந்த கண்டனத்துக்குரியது. டிச. 10-ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது கட்சி நிா்வாகிகள் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பிறந்த நாளான நவ. 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரத்த தானம், உடல்தானம், மரக்கன்றுகள் நடுதல், கல்விசாா் பணிகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் செய்து கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

