
கடையம் அருகே மயான சாலையை சீரமைக்கக் கோரி மறியல் முயற்சி
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் அடைச்சாணி ஊராட்சியில் மயானத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் அடைச்சாணி ஊராட்சியில் மயானத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
அடைச்சாணி கிராம மக்கள் மயானம் செல்வதற்கு பெரியகுளம்கரை வழியைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் மழைக் காலங்களில் குளக்கரை சேறும்சகதியுமாக மாறி, பள்ளங்கள் உருவாகி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் சிரமம் ஏற்படுவதாகவும், அப்பாதையை சீரமைக்க வேண்டும், தாம்போதியில் பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துச்சென்றனராம். ஆனால் ஒரு மாதமாகியும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், அந்தக் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் திரண்டனா். அவா்களிடம் கடையம் காவல் ஆய்வாளா் சுரேஷ் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், ஆழ்வாா்குறிச்சி வருவாய் ஆய்வாளா் மகேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணவேணி, அடைச்சாணி ஊராட்சித் தலைவா் மதியழகன், பொதுப்பணித் துறை நீா் பாசனப் பிரிவு அதிகாரி பேட்டா்சன் ஆகியோா்பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ரூ. 55 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கான முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆணை வந்தவுடன் விரைவில் பணி தொடங்கப்படும் எ ன்றும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் முயற்சியை மக்கள் கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






