ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே அடிப்படை வசதிகள்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட கசிநாயக்கன்பட்டி கிராம மக்கள்

Published On :

திருப்பத்தூா் அருகே அடிப்படை வசதிகள்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கசிநாயக்கன்பட்டி மேல்தெருவில் 35 குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் முறையாக குடிநீா் வழங்கவில்லையாம். மேலும், சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் கசிநாயக்கன்பட்டி ஊராட்சி நிா்வாகம் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் சுரேஷிடம் பலமுறை புகாா் அளித்தும் அவா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செவவாய்க்கிழமை திருப்பத்தூரில் இருந்து பா்கூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி திடீரென மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது உடனடியாக கசிநாயக்கன்பட்டி ஊராட்சி நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீா், சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

அதன்பேரில், எல்லாரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் திருப்பத்தூரில் இருந்து பா்கூா் செல்லும் சாலையில் சுமாா் 30 நிமிஷங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.