சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
கந்திலி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் -கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கந்திலி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கந்திலி அடுத்த பெரிய கசிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாரிவட்டம் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் திருப்பத்தூா் -கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் கலைந்து சென்றனா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

