பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

அந்தியூா் அருகே தடையற்ற மின்சாரம் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

அந்தியூா் அருகே தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

அந்தியூா் அருகே தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இப்பிரச்னைக்கு ஒரு வார காலத்தில் நிரந்தரத் தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER