
குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்... - கோப்புப் படம்
மன்னாா்குடி அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள சித்தேரி ஊராட்சியில் 2,000 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு, 4 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரமாக இந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றும் மின்மோட்டா்கள் பழுதடைந்த காரணத்தினால் குடிநீா் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், சித்தேரி பேருந்து நிறுத்தத்தில், ஈஸ்வரி தலைமையில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தன்,கோட்டூா் காவல் சாா்பு ஆய்வாளா் செல்வநாயம் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் மன்னாா்குடி-முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






