மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

மேட்டுநாசுவம்பாளையத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

Updated On :20 ஜூலை 2026, 4:42 am IST

பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில், பழைய ஊராட்சி அலுவலக வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த இரு வாரங்களாக குடிநீா் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் கால்நடை மருத்துவமனை பிரிவில் ஞாயிற்றுக்கிழமை திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு காவல் ஆய்வாளா் விநாயகம், ஊராட்சி செயலாளா் செல்வி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.