19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

திருப்பத்தூா் அருகே சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் மறியல்

திருப்பத்தூா் அருகே சாலையில் பள்ளம் தோண்டியதால் அவதிக்குள்ளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :

திருப்பத்தூா் அருகே சாலையில் பள்ளம் தோண்டியதால் அவதிக்குள்ளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த ஜெய்பீம் நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அங்குள்ள சாலையை பயன்படுத்தி தங்களது அன்றாட பணிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சிலா் அந்த சாலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி திடீரென சாலையில் பள்ளம் தோண்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் வந்த திருப்பத்தூா் எம்எல்ஏ திருப்பதி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.