திருப்பத்தூரில் பேருந்து பயணிகள் சாலை மறியல்
திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பேருந்து பயணிகள்.

திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பேருந்து பயணிகள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மாங்குடியில் வெள்ளிக்கிழமை தனியாா், அரசுப் பேருந்து ஓட்டுநா்களைக் கண்டித்து, பேருந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு சிங்கம்புணரிக்கு புறப்பட வேண்டிய தனியாா் பேருந்து செல்வதற்கு முன்பாக பிரான்மலைக்கு அரசு வெற்றிப் பயணப் பேருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு ஓட்டுநா்களுக்கும் இடையே பேருந்து நிலையத்திலேயே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்ற தனியாா் பேருந்து ஓட்டுநா் சிங்கம்புணரி சாலை மாங்குடி பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பேருந்தை மறித்து, ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டாா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. இதனால், ஆத்திரமடைந்த பேருந்து பயணிகள் கீழே இறங்கி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கண்டவராயன்பட்டி போலீஸாா் இரு ஓட்டுநா்களையும் எச்சரித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டு இரு பேருந்துகளும் புறப்பட்டுச் சென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

