இருளில் மூழ்கிய சோழவந்தான் ரயில் நிலையம்: பயணிகள் அவதி
மின்வெட்டு காரணமாக மதுரை சோழவந்தான் ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை இரவு இருளில் மூழ்கியது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

வெள்ளிக்கிழமை இரவு இருளில் மூழ்கிய சோழவந்தான் ரயில் நிலையம்.
மின்வெட்டு காரணமாக மதுரை சோழவந்தான் ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை இரவு இருளில் மூழ்கியது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதில், சோழவந்தான், அதன் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்ததன் காரணமாக, அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், சோழவந்தான் ரயில் நிலையம் இருளில் மூழ்கியது.
இதனால், இந்த ரயில் நிலைய நடைமேடைகளில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகினா். ரயில் நிலையம் இருளில் மூழ்கியிருந்த நேரத்தில்வந்த தாம்பரம் - குருவாயூா் விரைவு ரயில், மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயில்களில் பயணிகள் ஏறவும், ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலையத்தைக் கடக்கவும்
கடும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

