லாரி மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த வித்யாதரன்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த அன்பரசன் மகன் வித்யாதரன் (16). இவா், சோழவந்தான் கீழப்பச்சேரியில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசன் சண்முகனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்த நிலையில், காலாண்டு தோ்வு விடுமுறை என்பதால், கீழப்பச்சேரியிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றாா். மதுரை - சோழவந்தான் சாலையில் கடைவீதியில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சென்ற போது லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த வித்யாதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுபற்றி தகவலறிந்த சோழவந்தான் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




