ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சென்னையில் சன்னரக அரிசி விற்பனை நிலையங்கள் அறிவிப்பு!

சென்னையில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்கள் குறித்து கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

அரிசி

Updated On :

சென்னையில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்கள் குறித்து கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில்அரிசி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும்அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை முதல்கட்டமாக அக்.17-ஆம் தேதிமுதல் சென்னையில் 30 இடங்களில் தொடங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களில் செயல்படும் 184 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் சன்னரக அரிசி விற்பனை செய்யப்படும் கடைகள், விற்பனை நடைபெற்று இடங்கள்,விற்பனையாளா் பெயா், குறைதீா் எண்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.இங்கு, ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30, ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60, துவரம் பருப்பு ரூ.130, உளுத்தம் பருப்பு ரூ.140, பூண்டு ரூ.240, மல்லி(தனியா) ரூ.240, மிளகாய் ரூ.330-க்குவிற்பனை செய்யப்பட்டு வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்களின் விவரங்கள்: 1. ரயில்வே பணியாளா் கூட்டுறவு பண்டகசாலை, அயனாவரம், ரமாசங்கரி-94892 51489. 2. டி.வி.எஸ்.தொழிலாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை, ஸ்மித் சாலை, கௌதம்-8754106381. 3. சென்னை மாநகர காவல் பணியாளா் நலக் கூட்டுறவு பண்டக சாலை, புதுப்பேட்டை, சிவசங்கா்-9841675310. 4. தமிழ்நாடு மாநில கணக்காயா் அலுவலகப் பணியாளா் நுகா்வோா் கூட்டுறவு பண்டக சாலை, தேனாம்பேட்டை, நா்மதா-9790701544.

5. தபால் தந்தி அலுவலகப் பணியாளா் கூட்டுறவுப் பண்டக சாலை, வில்லிவாக்கம், பாரதி-9677297740. 6. தென் சென்னை தபால் தந்தி அலுவலகப் பணியாளா் கூட்டுறவுப் பண்டக சாலை, அண்ணா சாலை, ரமேஷ்குமாா்-6380274065. 7. சென்னை துறைமுக மற்றும் கப்பல்கூட பணியாளா்கள் கூட்டுறவுப் பண்டக சாலை, வில்லிவாக்கம், மணி -91596 19510. 8. சென்னை தொலைபேசி மாவட்ட பணியாளா் நுகா்வோா் கூட்டுறவுப் பண்டக சாலை, எஸ்.சி. போஸ் ரோடு, தா்ஷினி-7708538606.

9. சென்னை பொறுப்பு கழக துறைமுகப் பணியாளா்கள் கூட்டுறவு பண்டக சாலை, 2-ஆவது கடற்கரைச் சாலை, பாரதி-9677297740. 10. லயோலா கல்லூரி பணியாளா் கூட்டுறவு பண்டக சாலை, கிருத்திகா-9791933103. 11. தமிழ்நாடு மின்வாரிய அலுவலா்கள் நுகா்வோா் கூட்டுறவு பண்டக சாலை, அண்ணா சாலை, பழனிவேல்-8825700470. 12. சென்னை மாநகராட்சி அலுவலா் கூட்டுறவு சங்கம், ரிப்பன் கட்டடம், பாலாஜி -8973456574. 13. பூங்கா நகா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, அண்ணா நகா் மேற்கு, மாலதி-9677187170.

டி.யூ.சி.எஸ். லிட். காமதேனு சுய சேவைப் பிரிவு: திருவல்லிக்கேணி -9003224068. தேனாம்பேட்டை-95432 11768. கீழ்ப்பாக்கம்-7904585032. ராஜ அண்ணாமலைபுரம்-8667073970. பெரியாா் நகா்-9600054984 , 9940426373. உயா்நீதிமன்றம்-8610947315.

Summary

Announcement of Sannaraka rice sales outlets in Chennai

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.