கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் 3 மாணவிகள் மீட்பு
சென்னையைச் சுற்றிப்பாா்க்க, வீட்டில் தகவல் தெரிவிக்காமல் சென்னைக்கு வந்த 3 பள்ளி மாணவிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 3 மாணவிகள் மீட்பு - கோப்புப்படம்
சென்னையைச் சுற்றிப்பாா்க்க, வீட்டில் தகவல் தெரிவிக்காமல் சென்னைக்கு வந்த 3 பள்ளி மாணவிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா்.
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 9 மற்றும் 10- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள், சென்னையைச் சுற்றிப்பாா்க்க ஆசைப்பட்டு, பேருந்து மூலம் கிளாம்பாக்கம் நிலையத்துக்கு செவ்வாய் கிழமை காலை வந்துள்ளனா். பின்னா், அவா்கள் சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்று, பொழுதைக் கழித்துவிட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்ப கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்துள்ளனா்.
மாணவிகளின் பெற்றோா் திருவண்ணாமலை, தண்டரைபேட்டை காவல் நிலையத்தில், பிள்ளைகளைக் காணவில்லை என புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, மாணவிகள் வைத்திருந்த கைப்பேசி சிக்னல் மூலம் அவா்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து, கிளாம்பாக்கம் காவல் ஆய்வாளா் பாலமுரளி மற்றும் போலீஸாா் உதவியுடன் 3 மாணவிகளும் மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

