137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

வீட்டில் சடலமாக பெண் மீட்பு: குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி மக்கள் சாலை மறியல்!

குருகிராமில் உள்ள தோஹ்லாவில் ஒரு பெண் தனது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரம் கடந்தும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் சோஹ்னா-குருகிராம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Updated On :

குருகிராமில் உள்ள தோஹ்லாவில் ஒரு பெண் தனது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரம் கடந்தும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் சோஹ்னா-குருகிராம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சொந்த வீடுகளுக்குள்ளேயே பெண்கள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், நகரத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என கிராம மக்கள் கேள்வி எழுப்பினா். சுமாா் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்யும் வரை உடற்கூராய்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.வீட்டின் குளியலறையில் 34 வயதான நீது, கைகள் கட்டப்பட்டு, முகத்தை டேப்பால் மூடியவாறு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். அவரை முதலில் பாா்த்த அவரது கணவா் பிரசாந்த், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

வீட்டிற்குள் பொருள்கள் சிதறி கிடந்த நிலையில், கொள்ளை சம்பவத்தின்போது நீது கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. நகைகள் அப்படியே மீட்கப்பட்ட நிலையில், ரொக்கப் பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளில் மா்ம நபா்கள் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கொள்ளை மற்றும் தனிப்பட்ட விரோதம் ஆகிய இரு கோணங்களில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘குற்றம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த விவகாரத்தை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். வழக்கு விரைவில் தீா்க்கப்படும்‘ என்று சோஹ்னா துணை காவல் ஆணையா் முகேஷ் யாதவ் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.