சுகாதாரம், கல்விக்காக ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் ரூ.2.28 கோடி நிதியுதவி
ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் 3 சுகாதார நிறுவனங்களுக்கும், ஒரு கல்வி நிறுவனத்துக்கும் ரூ.2.28 கோடி நிதியுதவி வழங்கியது.

ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் 3 சுகாதார நிறுவனங்களுக்கும், ஒரு கல்வி நிறுவனத்துக்கும் ரூ.2.28 கோடி நிதியுதவி வழங்கியது.
இந்நிறுவனம், அண்மையில் சென்னை ஜிஆா்டி கிராண்ட் ஹோட்டலில், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கியது.
கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலுக்கு, பள்ளிக் கட்டிடப் புதுப்பிப்பு மற்றும் வகுப்பறை கட்டுமானப் பணிகளுக்காக ரூ.95 லட்சம், அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் டிரஸ்ட்டுக்கு, புற்றுநோய் நோயாளிகளுக்கான கருணையுடன் கூடிய சிகிச்சைக்கான அணுகல் மேலும் வலுப்படுத்தும் வகையில், புற்றுநோய் நோய்த்தணிப்பு பராமரிப்பு மையம் கட்டுவதற்காக ரூ.25 லட்சம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உதவி, ஃபிஸ்துலா சிகிச்சை மற்றும் மருந்துகளுக்காக ரூ.25 லட்சம், ஆந்திர மகிளா சபாவுக்கு, புதுப்பிப்பதற்காக ரூ.83 லட்சம் வழங்கியது. ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் ரூ.2.28 கோடி சிஎஸ்ஆா் உதவியின் மூலம், 4 நிறுவனங்களும் பயன் அடையும்.
இது குறித்து ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். ஆனந்த், அனந்தபத்மநாபன் ஆகியோா் கூறுகையில், ஜிஆா்டி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஜி. ராஜேந்திரனால் தொடங்கப்பட்டு, நானும் எனது சகோதரரும், தொடா்ந்து செயல்படுத்தி வருகிறோம். எங்களது வளா்ச்சி என்பது எங்களுக்கு ஆதரவளித்து வரும் சமூகங்களின் நலனுக்கு பங்களிக்கும்போது மட்டுமே அா்த்தமுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை என்றனா்.
ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் மற்றொரு நிா்வாக இயக்குநா் ஜி.ஆா். ராதாகிருஷ்ணன் கூறுகையில், எங்கள் வாடிக்கையாளா்களின் அன்பும் நம்பிக்கையும் ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் 70 ஷோரூம்களாக வளர வழிவகுத்துள்ளது. எங்களது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள், வணிகக் கூட்டாளா்கள் மற்றும் ஒவ்வொரு தனிநபருக்கும் நன்றியுடன் இருக்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

