உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

விழிப்புணா்வால் குறைந்த டெங்கு பாதிப்பு: மருந்து துறை இணை இயக்குநர்!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளால் டெங்கு பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இணை இயக்குநா் எம்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

வடக்கு மண்டலத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், உபகரணங்களைப் பாா்வையிட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் இணை இயக்குநா் எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Published On :

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளால் டெங்கு பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இணை இயக்குநா் எம்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கோவை மத்திய மண்டலம் 48-ஆவது வாா்டு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் இணை இயக்குநா் எம்.செந்தில்குமாா் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளால் டெங்கு காய்ச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைத்தல், பயன்படுத்தப்படாத டயா்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுப் பொருள்களில் மழைநீா் தேங்காமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து சுகாதாரப் பணியாளா்கள் சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். இதனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து, கோவை வடக்கு மண்டலம் ஸ்ரீனிவாசன் நகரிலும், மேற்கு மண்டலம் மேற்கு ராமலிங்கம் சாலை பகுதியிலும், தெற்கு மண்டலம் உப்பிலியா் திட்டு, கிழக்கு மண்டலம் நீலிக்கோணாம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதி, மத்திய மண்டலம் மந்திரியப்பன் வீதி உள்ளிட்ட 5 வீதிகளில் ‘டெங்கு விழிப்புணா்வு வீதி‘ என்ற தலைப்பில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இளைஞா்கள், சிறுவா், சிறுமியா், மகளிா் உள்ளிட்டோா் விழிப்புணா்வு கோலப்போட்டியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.