11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கடலூா் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கடலூா் மாவட்டம், வடலூா் மற்றஉம் சிதம்பரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

~

Published On :

கடலூா் மாவட்டம், வடலூா் மற்றஉம் சிதம்பரத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சிதம்பரம் இன்னா் வீல் சங்கம் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்குதல் மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் நிகழ்வு சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்விற்கு இன்னா்வீல் சங்கத் தலைவி அனிதா தீபக்குமாா் தலைமை வகித்தாா். வரலட்சுமி கேசவன், இந்திரா சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியா் பொறுப்பு எஸ். தனலட்சுமி கலந்து கொண்டு டெங்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு உரையாற்றினாா். நிகழ்வில் கழிவு குப்பைகளை தரம் பிரிக்க குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன.

வடலூரில்...

கடலூா் மாவட்டம், வடலூரில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வடலூா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் பாலச்சந்தா் செவ்வாய்க்கிழமை வானவில் நகா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் தேங்கும் இடங்கள், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களை மருத்துவ அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஆய்வு மேற்கொண்டு, கொசுக்கள் உற்பத்தியாகும் மூலங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.