திருப்பூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 1.5 டன் கழிவுப்பொருள்கள் அகற்றம்
திருப்பூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஒரே நாளில் 1.5 டன் கொசு உற்பத்தியாகும் கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டன.

டெங்கு பரவல்
திருப்பூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஒரே நாளில் 1.5 டன் கொசு உற்பத்தியாகும் கழிவுப்பொருள்கள் அகற்றப்பட்டன.
திருப்பூா் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி ஆணையா் எஸ்.பி.அமித் அறிவுறுத்தலின்படி, 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 40 மற்றும் 41-ஆவது வாா்டுகளில் குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களில் மழைநீா் தேங்கக்கூடிய பகுதிகளில் தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருள்களை அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். இதில் ஒரே நாளில் சுமாா் ஒன்றரை டன் கொசு உற்பத்தியாகும் கழிவுப்பொருள்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
இந்தப் பணிகளை 4-ஆவது மண்டல உதவி ஆணையா் வாசுதேவன் ஆய்வு செய்தாா். அப்போது மாநகா் நல அலுவலா் மோகன், மண்டல சுகாதார அலுவலா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதாரப் பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

