தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

65 வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரம்: ஆணையா்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையா் நே. பொன்மணி தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார அலுவலா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய மாநகராட்சி ஆணையா் நே.பொன்மணி. ~திருச்சி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார அலுவலா்களுக்கான விழிப்புணா்வுக் க

Updated On :

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையா் நே. பொன்மணி தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகராட்சி சாா்பில், டெங்கு தடுப்பு தொடா்பான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி தலைமையில், மாநகா் நல அலுவலா் மற்றும் துணை மாநகா் நல அலுவலா்,

சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், நல ஆய்வாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், ஆணையா் நே. பொன்மணி பேசியதாவது: மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீா், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதால், மாநகராட்சி அனைத்து மண்டலங்கள் முழுவதும் கண்காணிப்பை வலுப்படுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் விதமாக, டெங்கு புழு உருவாக ஏதுவான நீராதாரங்களை கண்டறிந்து அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நின்றவுடன் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வரும் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆணையா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.