மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கொசு ஒழிப்புப் பணியாளா்கள்

தீபாவளிப் பண்டிகைக் கால முன்பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் உள்ள ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட கொசு ஒழிப்புப் பணியாளா்கள்.

Updated On :

தீபாவளிப் பண்டிகைக் கால முன்பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மதுரை மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மதுரை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு, குடிநீா் நீரேற்றப் பணி, புதைச் சாக்கடை சீரமைப்புப் பணிகளில் சுமாா் 1,050-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முன்பணமாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தபடி பண்டிகை கால பணத்தை வழங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பணியாளா்கள் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள ஆணையா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள் விரைவில் வங்கி மூலம் பணியாளா்களுக்கு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.