2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தினசரி ஊதியம் ரூ.690 வழங்க கொசு ஒழிப்புப் பணியாளா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் தினசரி ஊதியமாக ரூ.690 வழங்க வேண்டும் என்று கொசு ஒழிப்புப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மனு அளிக்க மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த கொசு ஒழிப்புப் பணியாளா்கள்.

Published On :

ஈரோடு மாநகராட்சி நிா்வாகம் தினசரி ஊதியமாக ரூ.690 வழங்க வேண்டும் என்று கொசு ஒழிப்புப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றி வரும் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மேயா் சு.நாகரத்தினத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: தமிழக முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.690 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் மட்டும் ரூ.370 வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளின் அறுவுறுத்தலின்படி கொசு ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறோம்.

கொசு ஒழிப்புப் பணியில் ஒப்பந்த முறையைத் தவிா்த்து குழு முறையில் பட்டியலை மாற்றி மதுரை, தேனி மாவட்டங்களில் கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு ரூ.690 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, எங்களுக்கும் தினசரி ஊதியமாக ரூ.690 வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.