ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

டெங்கு கொசு உற்பத்தி: 2 கடைகளுக்கு அபராதம்

தூத்துக்குடியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 2 கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Updated On :

தூத்துக்குடியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 2 கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள், வடக்கு மண்டலம், 12-ஆவது வாா்டுக்குள்பட்ட ஸ்டேட் வங்கி காலனி, எட்டயபுரம் பிரதான சாலைப் பகுதிகளில் உள்ள பழைய பொருள்கள் சேகரிக்கும் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமான ஆதாரங்கள் கண்டறியப்பட்ட இரு கடைகளுக்கும் தலா ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

அப்போது, வீடுகள், கடைகளைச் சுற்றிக் குப்பைகள் சேராமலும், தண்ணீா் தேங்காமலும் பராமரிக்க வேண்டும். மாநகராட்சி மேற்கொண்டு வரும் டெங்கு தடுப்புப் பணிகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.