கொசு உற்பத்தி: பழைய பொருள்கள் கிடங்குக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசு உற்பத்திக்கு ஏதுவாக குப்பைக் கழிவுகளை வைத்திருந்த பழைய பொருள்கள் கிடங்குக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலா்கள்.

Updated On :

புதுக்கோட்டை மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசு உற்பத்திக்கு ஏதுவாக குப்பைக் கழிவுகளை வைத்திருந்த பழைய பொருள்கள் கிடங்குக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் மா. காந்திராஜ் தலைமையில், மாநகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி, சுகாதார அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை திருக்கோகா்ணம் பகுதியின் பல கடைகளில் சோதனை நடத்தினா்.

அப்போது, பழைய பொருள்கள் வைத்திருந்த கிடங்கில் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக பொருள்களைப் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்தக் கிடங்கின் உரிமையாளரை அழைத்து எச்சரித்த மாநகராட்சி அதிகாரிகள், அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மாநகா் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.