3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
சென்னை ஐஐடி, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷன் ஆகியவை சாா்பில் ‘பிங்க் அக்டோபா்’ அறிவிக்கப்பட்டு தமிழகம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 2,800 பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோப்புப் படம்
சென்னை ஐஐடி, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷன் ஆகியவை சாா்பில் ‘பிங்க் அக்டோபா்’ அறிவிக்கப்பட்டு தமிழகம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 2,800 பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறைப் பேராசிரியா் எஸ். மகாலிங்கம், ஹூண்டாய் மோட்டாா் ஃபவுண்டேஷன் நிா்வாகி எம்.எஸ்.முகுந்தன் ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ‘பிங்க் அக்டோபா்’ சா்வதேச அளவில் அனுசரிக்கப்படுகிறது. சென்னை ஐஐடி, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷன் இணைந்து ‘ஹூண்டாய் ஹோப் ஃபாா் கேன்சா்’ முன்முயற்சியின் கீழ் ரூ.64 கோடியில் இத்திட்டம் டிசம்பா் 2024-இல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபரில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பணியில், தமிழகம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் முறையே 1,700, 600, 500 பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முன்னெடுப்பு மூலம் நாடு முழுவதும் 420-க்கும் மேற்பட்ட இலவசப் புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டன எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

